"கன்னுகுட்டிக்கு பின் 15 VIP-க்கள்.. வன்முறை, பாலியல் தொல்லைகள்" - கருணாபுர மக்கள் திடுக் தகவல்
விஷ சாராய விற்பனையால் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மக்கள், தங்கள் பகுதிக்கு சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயாம் அருந்திய 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பகுதிக்கு சிசிடிவி கேமரா வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். கருணாபுரம் பகுதியில் ஒவ்வொரு தெருவிலும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர். இதன் காரணமாக வன்முறைகளும், பாலியல் தொல்லைகளும் தங்கள் பகுதியில் தொடர்வதாக வேதனை தெரிவித்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனைகள் அறியப்படும் இடங்களில் முன்னதாகவே சிசிடிவி கேமரா வைத்து அவ்வூர் மக்கள் கண்காணித்து வந்த நிலையில், போலீசார் அதை அடித்து உடைத்தெறிந்ததாக காவல்துறையின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கருணாபுரம் பகுதியில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பதன் மூலம் விபரீதங்களை தடுக்க முடியும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.