கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் பாமக போராட்டம்.. பரபரப்பு

Update: 2024-06-22 17:10 GMT

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி மீது கண்டனம் தெரிவிப்பதாக ரிஷிவந்தியம்,சங்கராபுரம் திமுக எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் தெரிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட பாமகவினர் கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்