#Justin|| பயணிகளிடம் எகத்தாளமாக பேசிய பிரைவேட் பஸ் டிரைவர், கண்டக்டர்.. ஆப்பு வைத்த ஆர்டிஓ..!
- தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் லைசென்ஸ் ரத்து.
- கடலூர்: பயணிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசிய தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
- கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று விருத்தாச்சலம் செல்வதற்காக தயார் நிலையில் இருந்தது.
- அப்போது தனியார் பேருந்தின் நடத்துனர், விருத்தாச்சலம் பகுதிக்கு மட்டும் பயணிகள் ஏற வேண்டும் என கூறிக்கொண்டு இருந்தார்.
- அப்போது குறிஞ்சிப்பாடிக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் ஏறுவதற்கு முயன்ற போது, நடத்துனர் தகாத முறையில் பேசி கொண்டு , பேருந்து ஏற வேண்டாம் என கூறினார்.
- இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார் .
- இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
- அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) அருணாச்சலம் தலைமையில் இன்று காலை தனியார் பேருந்தை இயக்காமல் நிறுத்தினர்.
- பின்னர் டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
- இது மட்டும் இன்றி பொதுமக்களிடம் தகாத முறையிலும், தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதால் டிரைவர் மற்றும் நடத்துனர் லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்பட்டது.