#JUSTIN || கோழிக்கறி பிரியர்களே உஷார்...இதையெல்லாம் கொஞ்சம் பாத்து வாங்குங்க

Update: 2023-10-01 10:13 GMT

திருப்பூரில், நோய்வாய்ப்பட்டுஇறந்த கோழிகளை செயற்கை நிறமூட்டி பூசி விற்பனை செய்த இரண்டு பெண்களுக்கு நோட்டீஸ் வழங்கி, 22 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத் துறையினர் அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், திருப்பூர் - பெருமாநல்லூர் சாலை, பாண்டியன் நகர் பகுதியில் உள்ள சாலையோரம் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சாலையோரம் இறைச்சி விற்பனை செய்து கொண்டிருந்த கடைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வில், பண்ணைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த பிராய்லர் கோழிகளை வாங்கி வந்து விற்பனை செயற்கை நிறமூட்டி (கேசரி பவுடர் உடன் மஞ்சள்) பூசி நாட்டுக்கோழி என விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி, மலர் என்பதும், இதுபோன்ற விற்பனையில் நீண்ட நாட்களாக ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை கடுமையாக எச்சரித்து, நோட்டீஸ் வழங்கிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், விற்பனைக்காக வைத்திருந்த 22 கிலோ கோழி நோய்வாய்ப்பட்டு இறந்து போன கோழி இறைச்சியை பெனாயில் ஊற்றி பறிமுதல் செய்து அளித்தனர். இந்த ஆய்வின் காரணமாக பாண்டியன் நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் கூடினர். இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறையினர், தரமான இறைச்சிகளை சோதனை செய்து, எவ்வாறு வாங்குவது என்பது குறித்தும் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விஜயலலிதாம்பிகை - மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்.

Tags:    

மேலும் செய்திகள்