சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே எருமைப்பட்டியை சேர்ந்த வாசுதேவன் என்பவருக்கு, நிலத்தின் மீது 5 கோடி ரூபாய் பணம் தருவதாகக் கூறி, துரையரசு என்பவர், பணம் தராமல் நிலத்தை கிரயம் செய்துள்ளார். இதுகுறித்து கடந்த 2020-ஆம் ஆண்டு மேச்சேரி காவல் நிலையத்தில் வாசுதேவன் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில், ஜெயலலிதா கார் ஓட்டுனராக இருந்த கனகராஜின் சகோதரர் தனபால் இடைத்தரகராக இருந்ததால், அவரை மேச்சேரி போலீசார் கடந்த 29-ஆம் தேதி கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, நேற்று மாலை தனபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.