3 மணி நேரம் பொளந்து கட்டிய மழை.. கடல் போல் மாறிய ஈரோடு | Heavy Rain

Update: 2023-11-07 13:42 GMT

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, கருங்கல்பாளையம், அக்ரஹாரம், வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கனமழை காரணமாக, ஆங்காங்கே சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோடு, பல்வேறு இடங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. அன்னை சத்யா நகரில் உள்ள பிச்சக்காரன் பள்ளம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதோடு, 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்நிலையில், அமைச்சர் முத்துசாமி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன், சம்பவம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்