கரன்சியை மாற்றுவதில் பக்கா ஸ்கெட்ச்...ஈரான் நாட்டு நபரை காட்டிக்கொடுத்த சிசிடிவி

Update: 2024-01-31 02:49 GMT

மதுரையில் தனியார் நிறுவன அலுவலகத்தில் வெளிநாட்டு கரன்சியை மாற்றுவது போல் நடித்து ஒருவர் பணம் திருடியதாக கடந்த 26ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கிடைத்த வீடியோவின் அடிப்படையில், முகமது அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், எனினும் அவரிடம் ஈரான் நாட்டிற்கான எந்த ஆவணங்களும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் குற்ற வழக்கில் சிறையில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தனது பெயரில் ஆதார் கார்டு மற்றும் பான்கார்டு வாங்கி 3 ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்