இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்ததால் இளைஞரை 6 துண்டாக வெட்டி புதைத்த கும்பல்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2024-07-29 09:13 GMT

கரூரில், இளைஞர் ஒருவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று குழி தோண்டி புதைத்த சம்பவத்தில், 6 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

கரூர், தெற்கு காந்தி கிராமம் கம்பன் தெருவை சேர்ந்தவர் ஜீவா. 20 வயது இளைஞரான இவரை, ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல், கரூர் சிட்கோ தொழிற்சாலை பின்புறமுள்ள முட்புதரில் வைத்து கொன்று உடலை 6 துண்டுகளாக வெட்டி புதைத்தனர். இதில், ஜீவாவின் வீட்டருகே வசித்து வரும் சசிகுமார் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கடந்த 2021 இல் வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் கொலைக்கு பழிதீர்க்கும் வகையில் ஜீவா கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மோகன்ராஜின் கொலைக்கு ஜீவா உடந்தையாக இருந்ததாக கூறி ஏற்கனவே கும்பல் ஆத்திரத்தில் இருந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சசிகுமாரின் தலையை சீவப்போவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜீவா ஸ்டோரி வைத்ததாக தெரிகிறது. இந்நிலையில், கரூர் தொழிற்பேட்டை சிட்கோ பின்புறம் ஜீவாவை மது அருந்த அழைத்து கும்பல் கொன்றது தெரியவர, கைதான ஆறு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்