இன்ஸ்டாகிராம் காதல்..வீட்டைவிட்டு வெளியேறிய காதலர்கள் - காதலனுக்கு பதிலாக மாமாவை கடத்திய கும்பல்

Update: 2023-08-03 12:01 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் வீட்டார் மீது தாக்குதல் நடத்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகி உட்பட 14 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். இவரும் கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் சரண்யாவின் பெற்றோருக்கு தெரியவர, அவர்கள் மகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், காதலனுக்கு ரகசியமாக தகவல் தெரிவித்த சரண்யா, இளைஞருடன் உறவினர் வீட்டில் இருந்து தப்பிச் சென்றது அவரின் குடும்பத்தாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உடனே, மகளை தேடு பணியில் இறங்கிய குடும்பத்தார், பல்லடம் அருகே இருந்த இருவரையும் பிடித்து பல்லடம் காவல்நிலையம் சென்றுள்ளனர். இதையறிந்த இளைஞரின் குடும்பத்தாரும் பல்லடம் காவல்நிலையத்திறு வந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதி தங்களின் கட்டுபாட்டில் இல்லையென்பதால், திருப்பூரில் உள்ள நல்லூர் காவல்நிலையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர். இந்நிலையில், காவல்நிலையம் சென்றுகொண்டிருந்த இளைஞரின் வீட்டார் மீது தாக்குதல் நடத்த பெண்ணின் தந்தை ஆட்களை ஏவியுள்ளார். இதன்படி பார்வார்டு பிளாக் கட்சியின் திருப்பூர் மாவட்ட அமைப்பாளரான அன்பு ரமேஷ், 15 பேர் கொண்ட கும்பலுடன் வந்து இளைஞரை தாக்குவதற்கு பதிலாக, ஆள்மாறி அவரது மாமாவை கடத்தி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், கும்பலில் ஒருவரை கைது செய்த நிலையில், அன்பு ரமேஷ் உட்பட 14 பேரை வலை வீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்