உலக வளர்ச்சியில் ஆசியான் முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் தெரிவித்தார்...
Vovt
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற 20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி அங்கு சிறப்புரையாற்றினார்... நமது வரலாறும் புவியியலும் இந்தியாவையும் "ஆசியான்"-ஐயும் இணைப்பதாகத் தெரிவித்த அவர், பிராந்திய ஒருங்கிணைப்பு, அமைதி, செழிப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றின் மீதான நம்பிக்கை நம்மை ஒருங்கிணைப்பதாகக் குறிப்பிட்டார்... "ஆசியான்" நாடுகளுடனான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தியாவின் "Act East Policy"-யின் மையத் தூண் ஆசியான் கூட்டமைப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்தார். உலக வளர்ச்சியில் ஆசியான் முக்கியப் பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்த கூட்டாண்மை 4வது தசாப்தத்தை எட்டியுள்ளதாகத் தெரிவித்ததுடன், ஆசியான் உச்சி மாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்குவது தனக்கு கிடைத்த பெருமை என்றும் பெருமிதம் தெரிவித்தார். மேலும், இதை ஏற்பாடு செய்ததற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை வாழ்த்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.