3 லட்ச ரூபாய் செலுத்தினால்... 6 லட்சமாக திருப்பி தரப்படும்... டபுள் டமக்கா திட்டம் எனக் கூறி மோசடி

Update: 2022-10-13 11:47 GMT

3 லட்ச ரூபாய் செலுத்தினால்... 6 லட்சமாக திருப்பி தரப்படும்... டபுள் டமக்கா திட்டம் எனக் கூறி மோசடி

சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு, பண மோசடி செய்ததாக ஏராளமான பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்

தமிழகத்தில் அடுத்தடுத்து நிதி மோசடிகள் நடைப்பெற்று வரும் சூழலில், "பிரஸ் பாஸ்கெட்" என்ற நிறுவனம் ஆக்ரோ டிரேடிங் திட்டத்தின் மூலமாக, பலகோடி ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக புகார் எழுந்துள்ளது.

அதன்படி, டபுள் டமக்கா என்ற திட்டத்தில் 3 லட்ச ரூபாய் செலுத்தினால்,101 நாட்களில் 6 லட்சமாக திருப்பி தரப்படும் போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரங்களை அறிவித்துள்ளது.

இதனை நம்பி பணத்தை செலுத்திய பொதுமக்களை, அந்த நிறுவனம் ஏமாற்றியதாக சொல்லப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்டோர் தங்களது பணத்தை மீட்டு தரக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்