மனைவியின் ரூமில் உயிரிழந்து கிடந்த கணவன்... வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

Update: 2023-12-31 17:06 GMT

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் வசித்துவந்த அசோக்குமார் என்பருக்கு திருமணமாகி, சிந்து என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், கடந்த 23ம் தேதி, மனைவயின் வீட்டில் இருந்த அசோக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் மாரடைப்பால் உயிரிழந்ததாக சிந்து வீட்டார் தரப்பில், அசோக்குமாரின் பெற்றோருக்கு தகவல் கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால், மருத்துவமனையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிந்து வீட்டார் கூறியுள்ளனர். இதனிடையே, மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அசோக்குமாரின் பெற்றோர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துவதாகக் கூறிய அவர்கள், விசாரணை மேற்கொள்ள வேறு ஒரு அதிகாரியை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்