கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை என்ற நூலுக்கு, தமிழ் பேராயமும், மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் விருது அறிவித்துள்ளது. சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டு, கோலாலம்பூரில் வரும் 8ஆம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக அறிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், படைப்பாளிகள் வாழும்போதே உரிய அங்கீகாரம் கொடுத்தால், பல படைப்புகள் கிடைக்கும் என்றார். தொடர்ந்து பேசிய கவிஞர் வைரமுத்து, மகா கவிதை நூலுக்காக கொடுத்து உழைப்பு, வலி போன்றவை இந்த விருதுக்கு முன்பு துச்சம் என்றார். 22 ஆண்டுகளாக ஞான பீடம் தமிழுக்கு விருது வழங்கவில்லையே என்று வேதனை தெரிவித்தார்