கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மதுபோதையில் அடித்த கணவனை, மனைவியே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.ஒசூர் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ் - நந்தினி. கோவிந்தராஜ் கல் உடைக்கும் வேலையும், நந்தினி தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளனர். குடிக்கு அடிமையான கோவிந்தராஜ் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். நேற்று இரவு மதுபோதையில் வந்த அவர், மனைவியை அடிக்கவும் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கோவிந்தராஜை கழுத்தை நெறித்து கொலை செய்தார். அக்கம்பக்கத்தினரிடம் படுக்கையிலேயே இறந்துவிட்டதாக நாடகமும் ஆடியுள்ளார். பிரேத பரிசோதனை முடிவில் உண்மை வெளிவரவே, நந்தினி கைது செய்யப்பட்டார். இந்த தம்பதிக்கு 17 வயதில் மகளும், 15 வயதில் மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.