சர்ச்சை பதிவு... சிறையில் பாஜக நிர்வாகி... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அகமத் பயாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பிற மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக ஆன்மிக மாநில பிரிவு செயலாளர் குருஜி முகநூலில் பதிவிட்டதாகவும், புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் வலியுறுத்தி இருந்தார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் அவர் செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்த நீதிபதி, சர்ச்சைக்குரிய பதிவுகளை, படங்களை நீக்குவதற்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.