கொரோனா பணியின்போது இறந்த முன்களப் பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் கொள்கையை சமர்ப்பிக்குமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த செவிலியர் தங்கலட்சுமியின் கணவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், மாநில அரசு இழப்பீடு வழங்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்களப் பணியாளர்களுக்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட கொள்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.