மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை காரணமாக சுமார் 10 ஆயிரம் ஏக்கரில், சம்பா தாளடி நடவு செய்யப்பட்ட இளம்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நிலங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.