இரவில் கொட்டித் தீர்த்த கனமழை.. ஜில்லென மாறிய சிவகாசி கிளைமேட்..! | Heavy Rain
சிவகாசி மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருத்தங்கல், சித்துராஜபுரம், பாறைப்பட்டி, சாட்சியாபுரம், அனுப்பன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த கனமழையானது பெய்துள்ளது. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த மழையால் தீபாவளி பட்டாசுகளின் விற்பனை பாதிக்கப்பட்டது