காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-06-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- இந்தியாவின் வளர்ச்சிக்காக கருத்தொற்றுமை அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்.... மக்களின் விருப்பங்களை நனவாக்குவோம் என்றும் பிரதமர் மோடி உறுதி...
- நாளை மாலை 7.15 மணிக்கு முறைப்படி பிரதமராக பதவியேற்கிறார் மோடி....பிரதமர் நியமன ஆணையை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வழங்கிய நிலையில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்.....
- மோடியின் புதிய அமைச்சரவை பட்டியலில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பெயர் பரிசீலனை. தமிழக பா.ஜ.க. தலைவரை மாற்ற திட்டம் என்றும் தகவல்...
- பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு, ஆளில்லா விமானம், பாரா-கிளைடர் போன்றவை பறக்க தடை.. டெல்லி காவல்துறை உத்தரவு...
- பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவிற்கு நடிகர் ரஜினிக்கு அழைப்பு.. ஆந்திராவில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவிற்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு அழைப்பு..
- 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் 15ம் தேதி தொடங்கும் எனத் தகவல்....முதல் இரண்டு நாள்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் எனத் தகவல்.....
- டெல்லியில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..... எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க வாய்ப்பு...
- வரும் 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.. சுமார் 25 நாட்களுக்கு மேல் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்ப்பு...
- முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்... சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு..
- நீட் தேர்வை ஒழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்.. 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...
- நடிகை சுனைனாவுக்கு முடிந்தது திருமண நிச்சயதார்த்தம்.... எக்ஸ் தள பக்கத்தில் சுனைனா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.....