ஹெச்.சி.எல் டெக் நிறுவனத்தின் சேர்மன் ரோஷினி
நாடாருக்கு, பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான
செவாலியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான
பிரான்ஸ் நாட்டு தூதர் தியரி மாத்தொ, பிரான்ஸ் அதிபரின்
சார்பில், ரோஷினி நாடாருக்கு இதை நேற்று வழங்கினார்.
தொழில்துறையில் சாதனை, இந்தியா, பிரான்ஸ் இடையே
பொருளாதார உறவுகளை மேம்படுத்த தொடர் முயற்சி,
சமூக, சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீர்க்க முயற்சி
செய்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
செவாலியர் விருது, 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸை
ஆண்ட சக்ரவர்த்தி நெப்போலியனால் தோற்றுவிக்கப்பட்ட
விருது என்பது குறிப்பிடத்தக்கது.