சேலத்தில் விதிமுறைகளை மீறி காவல்துறையினர் ஆதரவோடு நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அஸ்தம்பட்டி ரவுண்டானா சாலையை முழுமையாக அடைத்து மேடை அமைத்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ஞாயிறன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆணையர் சந்திரமௌலி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியால் அந்த வழியாக ஏற்காட்டிற்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளும் அவதிக்கு உள்ளாகினர்.இதனால் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.