குற்றச்சாட்டுகளை அடுக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி | RnRavi

Update: 2023-09-30 04:26 GMT

மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் நிறைய குறைபாடுகள் உள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம்சாட்டியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்கீழ் 18 வகை கைவினை கலைஞர்களை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர், விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுவது மட்டும்தான் என குறிப்பிட்டார். ஆனால், இங்கு சிலர் இதனை அரசியலாக்கி, குலக்கல்வி திட்டம் என தவறான தகவலை பரப்புவதாக குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான வீடு கட்டும் திட்டத்தில் 40 சதவிகித நிதி பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும், மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் குறைபாடுகள் உள்ளதாகவும் ஆளுநர் சாடினார். தமிழ்நாட்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண் இரண்டு ஆண்டுகளாக பஞ்சாயத்து தலைவியாக பதவியேற்க விடாமல் தடுப்பதுதான் சமூக நீதியா என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்