தமிழக அரசு பள்ளி மாணவர்கள், அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
2022-2023 ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்ற 100 மாணவர்கள் 3ஆம் தேதி ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களோடு அமைச்சர் அன்பில் மகேஸும் சென்றுள்ளார். டோக்கியோவில் நவீன அறிவியல் தொழில் நுட்பங்களோடு உலக புகழ்பெற்று விளங்கும் மிராய்கான் அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டனர். பின்னர், இந்திய தேசிய பள்ளிக்கு சென்ற போது, அமைச்சரையும், மாணவர்களையும், அந்த பள்ளி நிர்வாகத்தினரும், மாணவர்களும் அன்போடு வரவேற்றனர். அங்கிருந்த நூலகம், வகுப்பறை மற்றும் கற்பித்தல் முறைகளை பார்வையிட்டனர். தொடர்ந்து, மாணவர்களின் கலைத் திறமைகளைப் பார்வையிட்டு அங்குள்ள மாணவர்களோடு கலந்துரையாடினார். ஜப்பான் பயணத்தை முடித்துவிட்டு, தென்கொரியாவுக்கும் நாட்டிற்கும் செல்ல உள்ளனர்.