விடிய விடிய பெய்த பேய் மழை - காய்களுக்கு வந்த சோதனை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விடிய விடிய பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது. கோலணிமட்டம், முட்டி நாடு, செலவிப் நகர் உள்ளிட்ட கிராமங்களில் கேரட், பூண்டு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் ஆகியவை பயிரிடப்பட்டிருந்தன. இவை கனமழையால் தண்ணீரில் மூழ்கி வீண் ஆகியுள்ளது.
இந்த பகுதியில் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புகளால் தான், விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்ததாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.