நிலம் வாங்கி தருவதாக நடிகை கௌதமியிடம் 3 கோடியே 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் 12 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நிலம் வாங்குவதற்காக நடிகை கௌதமி கொடுத்த பணத்தை அழகப்பன், அவரது மனைவி நாச்சியார் உள்ளிட்டோர் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அழகப்பன், நாச்சியார் உள்ளிட்ட 12 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.