விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
திருச்சியில், வேளாண் சங்கமம் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்...
தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 'வேளாண் சங்கமம் 2023' என்ற பெயரில் வேளாண் கண்காட்சி இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் இயற்கை விவசாயம், நவீன தொழில்நுட்ப விவசாயம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு கருத்தரங்கங்களும் நடைபெற இருக்கிறது. இதில் 17 மாநில அரசு துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும், 80க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. இந்த கண்காட்சியினை 2 நாட்கள் பயணமாக திருச்சி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றவுள்ளார்.