26 பெண்களிடம் மோசடி.. சிக்கிய முன்னாள் விசிக நிர்வாகி.. பாய்ந்த குண்டாஸ்

Update: 2023-11-19 06:57 GMT

சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த காயத்திரி என்பவர் விசிகவின் முன்னாள் சேலம் மாநகர் மாவட்ட துணை செயலாளராக இருந்தார். இவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை பிரிவில் அரசு துறை உயர்அதிகாரியாக வேலை செய்வதாகக் கூறி, 26 பெண்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக புகார் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக, காயத்திரி மீது ஐந்து வழக்குகளும், அவரது ஓட்டுநர்கள் அசோக்குமார், ராஜசேகர் ஆகியோர் மீது மூன்று வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் காயத்திரி, அசோக்குமார், ராஜசேகர் ஆகியோர் தொடர் மோசடி குற்றங்களை ஈடுபட்டதால், மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் காவலில் வைக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்படி, அசோக்குமார், ராஜசேகர் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும், காயத்திரி கோவை பெண்கள் தனி சிறையிலும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்