நடிகை மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆதரவாளர்கள் தாக்குதல்
அதிமுக முன்னாள் அமைச்சரான மணிகண்டன் மீது நாடோடிகள் படத்தில் நடித்த துணை நடிகை பாலியல் புகார் அளித்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில், இருவரும் சமரசம் அடைந்ததை தொடர்ந்து வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
வழக்கை வாபஸ் பெற்று மலேசியா சென்ற பிறகு மணிகண்டன் தன்னை கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டிய துணை நடிகை, மணிகண்டனை சந்திப்பதற்காக ராமநாதபுரத்தில் உள்ள வீட்டிக்கு நேரில் சென்றார்.
அப்போது, மணிகண்டன் தாயார் மற்றும் ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது, முகம், கை, கால்களில் காயமடைந்ததால், மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.