செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே சாலைகளை சூழ்ந்த மழை நீர், இன்னும் வடியாமல் இருப்பதால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இங்குள்ள ஸ்ரீநகர், லஷ்மி அவென்யூ உள்ளிட்ட குடியிருப்புகளில் ஒன்பது நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் தொங்கிய நிலையில், பள்ளி மாணவர்கள் தேங்கிய நீரில் சிரமத்துடன் கடந்து சென்றனர். தேங்கியுள்ள நீரை ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து வெளியேற்றி வந்தாலும், அருகில் உள்ள ஏரியில் இருந்து நீர் வருவதால், முழுமையாக அகற்ற முடியவில்லை. மழை நின்ற பிறகு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.