`ஊர் தோறும் உணவு திருவிழா'...அரிதான அந்த காலத்து உணவுகள்... கண்முன் காட்டிய விவசாயிகள்

Update: 2024-05-18 13:23 GMT

சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் இயற்கை விவசாயிகள் மற்றும் மரபுகள் ஆரணி விவசாயிகள் சார்பில், இந்த உணவு திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. பண்டை காலங்களில் நம் முன்னோர் வாழ்ந்த போது உண்ட உணவுகள், மீண்டும் பொதுமக்கள் மத்தியில் கொண்டு வர புதிய முயற்சியாக இது நடத்தப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். சம்பா பழ கேசரி, கிச்சலி சம்பா சோறு,

கோளச்சோறு வெப்பாலை, காரக்குழம்பு, கொடம்புளி ரசம், இஞ்சி மோர் சிறுதானிய தயிர்சாதம், நாட்டு மாட்டு தயிர், முளைதானிய மசாலா, வாழக்காய் பக்கோடா, முடவாட்டு கிழங்கு கஞ்சி, உள்ளிட்ட பல்வேறு வகையான உணவை கடைகள் அமைத்து, விற்பனை செய்யப்பட்டன. இதில் வேளாண் மற்றும் தோட்டகலை கல்லூரி மாணவர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்