வீட்டில் தீ விபத்து.. அடுத்தடுத்த பலியான மனைவி,மகன் உலகை பார்க்க நினைத்த நபருக்கு நடந்த சோகம்

Update: 2024-09-14 12:28 GMT

திருத்தணியில் கடந்த 5ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

முருகப்பா நகர் பகுதியில் கடந்த 5ஆம் தேதி நள்ளிரவு வீட்டில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், பிரேம்குமார் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் இரண்டு குழந்தைகள் சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் மிதுலன், நபிலன் இரண்டு குழந்தைகளும் 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். பிரேம்குமார் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகிய சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி மஞ்சுளா உயிரிழந்தார். தற்போது பிரேம்குமார் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்