5 கோடி செலவில் சாலை இருந்தும் முதலுதவிக்காக 6கி.மீ மயக்கமடைந்த மகனுடன் தந்தை பயணம்... வேலூரில் மீண்டும் அவலம்

Update: 2023-07-30 03:13 GMT

வேலூரில், மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் மயக்கம் அடைந்த சிறுவனை இருசக்கரவாகனத்தில் அழைத்துச்சென்ற அவலம் மீண்டும் அரங்கேறியுள்ளது.

வேலூர் மாவட்டம் தீத்தானூரைச் சேர்ந்த 18 வயது சிறுவன் சந்தீப்பிற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கநிலைக்கு செல்வார் என கூறப்படுகிறது. ஜமுனாமுத்தூர் ஆரம்பசுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்ற போது அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு முழு உடல் பரிசோதனைக்கு பரிந்துரைத்துள்ளனர். இதனையடுத்து இருசக்கரவாகனத்தில் தந்தை, தாயுடன் அடுக்கம்பாறைக்கு செல்லும் வழியில், சந்தீப்பிற்கு கட்டிப்பட்டு மலை கிராமத்தில் மயக்கம் ஏற்பட்டு வலிப்பு வந்துள்ளது. 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து காத்திருந்த நிலையில், சாலை வசதி சரியில்லாததால் மலை அடிவாரம் வரை மட்டுமே வரமுடியும் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், மயக்கமடைந்த சந்தீப்பை சுமார் 6 கிலோமீட்டர் தூரம் இருசக்கரவாகனத்திலேயே அவரது தந்தை அழைத்துச்சென்று, பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்னர் பீஞ்சமந்தையில் 5 கோடியில் அமைக்கப்பட்ட தார் சாலை பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அதற்கருகிலுள்ள ஊரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்