குடும்பத்தையே காவு வாங்கிய விதி" - அவள் இல்லாமல் நான் இல்லை" - கிருஷ்ணகிரியில் சோகம்

Update: 2023-10-13 03:00 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜலபதி - அபிசல்மியா தம்பதி, வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக, இதயக் கோளாறுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையின் இறப்பால் மன உளைச்சலுக்கு ஆளான அபிசல்மியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக அபிசல்மியா எழுதிய கடிதத்தை போலீசார் மீட்டனர். அதில், தனது குழந்தையை பார்க்கப் போவதாக எழுதி இருந்தது வேதனை அளித்தது. இதனிடையே குழந்தை இறந்த ஏக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், மனவிரக்தியில கணவர் ஜலபதி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், மனைவி தூக்கில் தொங்கிய அதே சேலையிலேயே ஜலபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவியை விட்டு வாழ முடியவில்லை என்றும், மனைவி, குழந்தை சென்ற இடத்திற்கே செல்வதாகவும் தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில் இடம்பெற்றிருந்தது வேதனை அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்