பெரம்பலூர் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
செங்குணம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணன்,
மாட்டுக்கு புல் அறுக்க வயலுக்கு நடந்து சென்றுள்ளார். வயல் வெளியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து தொங்கியதை கவனிக்காத கண்ணன், எதிர்பாராத விதமாக மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்த மருவத்தூர் காவல் துறையினர் விவசாயி கண்ணனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்