கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த பவன், ஹிந்தி மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் இருபத்து ஐந்தே வயதான அவர், மாரடைப்பு காரணமாக மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். இது சின்னத்திரை வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பவனின் இறுதிச் சடங்குகள், அவரது சொந்த ஊரான மாண்டியாவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.