எண்ணூர் எண்ணெய் கசிவு.. "இதுவரை.." - அதிர வைக்கும் தகவல்

Update: 2023-12-14 16:11 GMT

சென்னை எண்ணூர் எண்ணெய் கசிவு விவகாரத்தில், இதுவரை 40 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக, எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதி, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு என கடந்து கடலில் கடந்ததால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விவகாரத்தில், கடலில் இருந்து எண்ணெயை அகற்ற, சுற்றுச்சூழல் துறை, வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுவரை 40 டன் எண்ணெய் கழிவுகளை சிபிசிஎல் நிறுவனம் அகற்றி இருப்பதாக, சுற்றுச்சூழல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து மொத்தமாக எவ்வளவு எண்ணெய் கசிவுகள் ஏற்பபட்டுள்ளது என்பதை கண்டறிய, ஐஐடி பேராசிரியர்களை கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகளில் நச்சுத்தன்மை இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்