சென்னை அடுத்த நங்கநல்லூரில் மகளிர் சுய உதவி குழு நடத்தி வரும் பெண்ணின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். நங்கநல்லூர் வீரமாமுனிவர் தெருவில் வசித்து வரும் கண்ணகி என்பவர், மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வரும் நிலையில், இவரது வீட்டிற்கு திடீரென விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பணப் பரிவர்த்தனை கணக்கு மற்றும் அது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.