ஓனரிடமே கைவரிசை காட்டிய டிரைவர்..ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

Update: 2023-08-24 04:11 GMT

சென்னை, கிண்டியில் இளைஞர் ஒருவர் தனது முதலாளியின் 15 லட்ச ரூபாய் பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை, நீலாங்கரை வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் முகமது ராசிக். இவர் இரும்பு வியாபாரி ஒருவரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த நிலையில், அதே வியாபாரியிடம் வேளச்சேரியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவரும் பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், சோமசுந்தரத்திடம் தனது முதலாளி 15 லட்ச ரூபாய் பணம் கொடுத்து அனுப்பியதை நோட்டமிட்ட ராசிக், தனது நண்பர்களுடன் சேர்ந்து சோமசுந்தரத்தை தாக்கி 15 லட்ச ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், முகமது ராசிக் உட்பட அவரது நண்பர்கள் 7 பேரை கைது செய்த நிலையில், அவர்களிடம் இருந்து 78 ஆயிரம் ரூபாய் பணம், கார் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்