நெருங்கி வரும் தீபாவளி பண்டிகை... - மாநகர காவல் ஆணையர் உத்தரவு

Update: 2024-08-04 13:19 GMT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்... தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர காவல் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசாரணைக்குப் பின் மட்டுமே உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... சாலை ஓரக் கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட மாட்டாது என்றும், விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது எனவும் காவல் ஆணையர் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்