அக்காவுடன் விளையாடிய 2 வயது குழந்தை.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. பெற்றோர் நெஞ்சில் இறங்கிய ஆணி
பழனி அருகே தேங்காய் நார் ஆலை எந்திரத்தில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியை சேர்ந்தவர் நிசேந்திரா.
இவருக்கு திருமணமாகி 4 வயதில் சுஷ்மிதா, 2 வயதில் ஜூமிதா என்ற பெண் குழந்தைகள் இருந்தன. சந்தன்செட்டிவலசு பகுதியில் தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் ஆலையில் வேலை செய்து வரும் நிசேந்திரா, குடும்பத்துடன் அங்கேயே உள்ள ஒரு அறையில் தங்கி உள்ளார். வழக்கம்போல் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு நிசேந்திரா, சஜானி ஆகியோர் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இதனிடையே வீட்டை விட்டு ஆலை பகுதியில் விளையாடிய 2 குழந்தைகளில், ஜூமிதா தேங்காய் மட்டை அரைக்கும் எந்திரத்தின் அருகே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி குழந்தை ஜூமிதா, பரிதாபமாக உயிரிழந்தாள். சத்தம் கேட்டு அங்கு வந்த நிசேந்திரா, சஜானி இருவரும், குழந்தையின் உடல் எந்திரத்தில் ரத்தமும், சதையுமாய் சிக்கி கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.