அலறவிட்ட டிஜிட்டல் அரெஸ்ட்-உட்கார்ந்த இடத்திலேயே ரூ.1.15 கோடி காலி - இப்படி கால் வந்தா உஷார்

Update: 2024-09-27 06:44 GMT

அலறவிட்ட டிஜிட்டல் அரெஸ்ட் - உட்கார்ந்த இடத்திலேயே ரூ.1.15 கோடி காலி - உங்களுக்கும் இப்படி கால் வந்தா உஷார்

டிஜிட்டல் அரெஸ்ட் மூலமாக ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த கோவையைச் சேர்ந்த 3 பேரை தமிழக சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீநிவாச சர்மா என்பவரிடம் மும்பை சைபர் கிரைம் பிரிவில் இருந்து பேசுவதாக தொடர்பு கொண்ட கும்பல், அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோத பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக கூறி மிரட்டியுள்ளது. அதைத் தொடர்ந்து, மும்பை சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி போல் பேசிய ஒருவர், ஸ்ரீநிவாச சர்மாவை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக கூறி, வேறு எங்கும் நகரக் கூடாது என்று மிரட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து 4 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து மிரட்டியதால் பல தவணைகளாக மொத்தம் ஒரு கோடியே பதினைந்து லட்சம் ரூபாய் பணத்தை ஸ்ரீநிவாச சர்மா அனுப்பியுள்ளார். அதன்பிறகு தனக்கு வந்த அழைப்புகளை அவர் ஆய்வு செய்தபோது, தாம் பண மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் இணையவழி குற்றப் பிரிவில் புகார் அளித்தார். அப்போது, போலீசார் விசாரணை நடத்தியதில், ஸ்ரீனிவாச சர்மா அனுப்பிய பணம், கோவையைச் சேர்ந்த வின் பவர் எனர்ஜி நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்குச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான விஸ்வநாதன், ஜெயராமன், சுனில் குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்