நட்ட நடு இரவில் ரகசிய பிசினஸ்..பெண் செய்த கேவலமான செயல் - திடீர் ரெய்டில் வெளுத்துவிட்ட பெண் ஆபிஸர்
தருமபுரியில் கருவின் பாலினத்தை கண்டறிந்து சொல்வதை வியாபாரமாக செய்து வந்த கும்பல் பிடிபட்டது.பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறியப்படுவதாக ஊரக நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தருமபுரி ஊரக நலத்துறை இணை இயக்குநர் சாந்தி, இரவு நேரத்தில் திடீர் சோதனையை நடத்தினார். அப்போது கருவின் பாலினத்தை கண்டறிந்து கொண்டிருந்த தனியார் மருத்துவமனை செவிலியர் கற்பகம் மற்றும் இடைத்தரகர் வடிவேல் ஆகியோர் பிடிபட்டனர். பாலினத்தை கண்டறிய வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். மேலும் இரண்டு இடைத்தரகர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது. பிடிபட்ட செவிலியரான கற்பகம், ஏற்கனவே பாலினத்தை கண்டறிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.