தருமபுரி மாவட்டடம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறியப்படுவதாக ஊரக நலத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தருமபுரி ஊரக நலத்துறை இணை இயக்குநர் சாந்தி, திடீர் சோதனை நடத்தியபோது, கருவின் பாலினத்தை கண்டறிந்து கொண்டிருந்த தனியார் மருத்துவமனை செவிலியர் கற்பகம் மற்றும் இடைத்தரகர் வடிவேல் ஆகியோர் பிடிபட்டனர். பாலினத்தை கண்டறிய வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். மேலும் இரண்டு இடைத்தரகர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது.