இடியுடன் வெளுத்தெடுத்த கனமழை... ஒருமணி நேரத்தில் பறிபோன உயிர்.. தருமபுரியில் அதிர்ச்சி

Update: 2024-05-05 08:18 GMT

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மாட்டுக் கொட்டகை தகர சீட் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. அதிகபட்சமாக கடந்த 2-ம் தேதி 108.5 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கிய நிலையில், 2-வது நாளாக நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் ஒருமணி நேரமாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

சென்றாயம்பட்டி கிராமத்தில் ஆடு மேய்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த கோவிந்தம்மாள், துளசி, மகேஸ்வரி ஆகியோர் அருகே மழைக்கு ஒதுங்கி மாட்டு கொட்டகையில் நின்றிருந்தனர். அப்போது காற்றின்வேகத்திற்கு கொட்டைகயின் மேல் இருந்த தகர ஷீட் பறந்து நின்றிருந்த 3 பேர் மீதும் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே கோவிந்தம்மாள் உயிரிழந்தார். படுகாயமடைந்த துளசி, மகேஸ்வரி மருத்துவவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 7 ஆடுகளும் உயிரிழந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்