முதல்வரின் தனிப்பிரிவுக்கு வந்த புகார்... அடுத்த நடந்த அதிரடி ஆக்‌ஷன்

Update: 2024-08-30 11:34 GMT

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா மருந்து கடையின் உட்புறம் போலி மருத்துவம் பார்ப்பதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் வந்தது. இதையடுத்து தருமபுரி மாவட்ட இணை இயக்குனர் சாந்தி அறிவுறுத்தலின்படி, போலி மருத்துவம் பார்த்து வந்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த வெங்கடேசன் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்த ஸ்டெதஸ்கோப், ஊசி, மருந்து மாத்திரைகள் குளுக்கோஸ் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்