"கிணற்றுக்குள்.." தாயின் பதற செய்த முடிவு.. தருமபுரி அருகே அதிர்ச்சி

Update: 2024-08-23 15:31 GMT

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் இருந்து தாய் மற்றும் 2 பெண் குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டனர்.

குக்கல்மலையில் உள்ள காமராஜர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவி, தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். குடும்பத்தகராறு காரணமாக ஸ்ரீதேவி, இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தீயணைப்புத்துறையினர் தாயார் ஸ்ரீதேவி, ஆறு வயது மூத்தமகள் வனிஷ்கா, மூன்று வயது இளைய மகள் ஹாசினி ஆகியோரின் சடலங்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்