ஒட்டனூர்- கோட்டையூர் இடையே பரிசல் இயக்குவதற்கான டெண்டரில் முறைகேடு என போட்டியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தர்மபுரி மாவட்டத்தையும், சேலம் மாவட்டத்தையும் இணைக்க கூடிய வகையில், மேட்டூர் நீர் தேக்கத்தை கடந்து செல்ல ஒட்டனூர்- கோட்டையூர் இடையே பரிசல் இயக்கப்படுகிறது. 3 ஆண்டுக்கு ஒரு முறை பரிசல் இயக்குவதற்கான டெண்டர் விடப்படும். இப்போது 2 முறை டெண்டர் பணிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில், 3வது முறையாக டெண்டர் பணி நடைபெற்றது. இதில் நான்கு ஒப்பந்ததாரர்கள் பங்கெடுத்ததாகவும், அதில் இருவர் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மற்ற இரண்டு போட்டியாளர்கள் தங்களுடைய ஒப்பந்த படிவத்தை துணை சேர்மன் பறித்துச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். லஞ்சம் பெற்றுக் கொண்டு டெண்டர் விடப்படுவதாகவும், திட்டமிட்டு ஒப்பந்ததாரர்களை புறக்கணித்து, அரசுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் டெண்டர் நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். ஏரியூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தலையிட்டு கலந்து செல்ல வைத்தனர்.