"எங்கள் ஊருக்கு TASMAC வேணும்..!" கலெக்டரிடம் கோரிக்கை வைத்த கிராம மக்கள்
தருமபுரி மாவட்டம் ஜக்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மதுபான கடை இல்லாததாக கூறப்படுகிறது. இதனால், மதுப்பிரியர்கள் பென்னாகரம் சென்று மது அருந்த வேண்டியுள்ளதாகவும், பல சமயம் அவர்கள் வீடு திரும்ப காலதாமதம் ஆவதாகவும், விபத்துகளில் சிக்குவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, தருமபுரி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற கிராம மக்கள், தங்கள் ஊரில் மதுபான கடை அமைக்க வேண்டுமென மனு அளித்தனர்.