தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள
சித்தேரி கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பேருந்து நிறுத்துமிடத்தில்
அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் பெண்கள், மாணவ மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே தங்கள் பகுதியில் உள்ள மதுபானக்கடையை மூட வலியுறுத்தி, 700க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், உள்ளிட்டோர் மதுபானக்கடையின் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அரூர் செல்லும் சாலையில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பட்டது.