பட்டப்பகலில் போலீஸ் டிரஸ் போட்டு பெண்களை வெட்டிய இளைஞர்.. விசாரணையில் பகீர்.. தர்மபுரியில் பரபரப்பு

Update: 2024-08-17 10:57 GMT

தலைமை காவலர் சீருடை அணிந்து சென்று இரண்டு பெண்களை கொடூரமான முறையில் வெட்டிய இளைஞரை தர்மபுரி போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி குமாரசாமிபேட்டை பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலைமை காவலர் சீருடை அணிந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சத்தம் போட்டுக் கொண்டு வந்தார். அங்கிருந்த இளநீர் கடையில் இருந்த அரிவாளை எடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்களை துரத்தினார். அங்கே இருந்த ஜெபகன்னி என்ற பெண்ணின் கைவிரல்களை வெட்டினார். பின்னர் சிவசுப்பிரமணி கோயிலில் நுழைந்து, கோயில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை கொடூரமாக வெட்டினார். அங்கிருந்தவர்கள் அவரை கோவில்

அறையில் வைத்து பூட்டினர். பின்னர் போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அவர் ஒசூரில் இருந்து வருவதாகவும், அங்கு காய வைக்கப்பட்டிருந்த தலைமை காவலர் சீருடையை அணிந்து கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். தனது பெயர் சித்திக் விக்னேஷ் என்றும் தூத்துக்குடி மாவட்டம் செம்மேரிகுளத்தை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்